Followers

Mar 30, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [30-03-2018]


தமிழகம்
# போராட்டம் தீவரமடைந்துள்ள நிலையில் பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை நிறுத்தம்

# உச்ச நீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர உள்ளது
- காவிரி பிரச்சினையில் ஆதரவளிப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் அமளியை நிறுத்துவோம் என அ.இ.அ.தி.மு.க. நிபந்தனை விதித்ததாகவும் அதை காங்கிரஸ் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது

# திருச்சியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வில்லெட் ஓவியா, வெளி மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைட் மற்றும் பிற வாயுக்களின் அளவைக் கணக்கிடுவதற்கான “அனிதா சாட்” என்ற செயற்கைக் கோளத் தயாரித்தமைக்காக தமிழக முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி நினைவுப் பரிசை வழங்கினார்

# சென்னை – மதுரை இடையே ஒரு வழித்தடத்திலும், மதுரை – சென்னை இடையே மற்றொரு வழித்தடத்திலும் என இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை – மதுரை இடையே பயண நேரம் மேலும் குறையும்
இந்தியா
# ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட்
- 49.1 மீட்டர் நீளம், 415.6 டன் எடையுள்ள ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் உயர்சக்தி கொண்ட எஸ்-பேண்ட் (S - Band) அலைவரிசை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகளுக்கு ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் மிகவும் உதவிகரமாக இருக்கும்

# ஊழல் புரிந்ததாக அரசு அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தாலோ அல்லது இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ, அந்த அதிகாரிக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதியை ஊழல் கண்காணிப்பு அமைப்பு நிறுத்தி வைக்க வேண்டும்: மத்திய பணியாளர் நலத் துறை

# சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்: குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், திரு. பிரகாஷ் ஜவடேகர் உறுதி

# உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரபேல் போர் விமானத்தின் விலையை வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
- பிரான்சில் தயாரிக்கப்பட்ட அதி நவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக அந்நாட்டுன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது
உலகம்
# வடகொரியா – தென்கொரியா இடையிலான உச்சி மாநாடு ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறும்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் முதல்முறையாக மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர்
- இதற்கு முன் 2000 மற்றும் 2007-ல் மா நாடுகள் நடைபெற்றுள்ளன

# வெனிசுலா சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக் கொண்டதில் 68 பேர் பலியாயினர்

# தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மலாலா யூசப்ஸாய், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய்நாடான பாகிஸ்தானுக்கு வந்தார்; பாதுகாப்பு காரணங்களால் அவருடைய பயணத்திட்டங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன

# அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர், திரு. நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்; மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி திரு. சத்ய நாதெள்ள இடம் பெற்றுள்ளார்
- உலகம் முழுவதும் இருந்து டைம் இணையத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் மற்றும் டைம் இதழின் ஆசிரியர் குழு பரிசீலனை அடிப்படையில் 100 பேரில் ஒருவர் இட்ந ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட உள்ளார்

# மலேசியாவில் எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, பொய் செய்திக்கான சிறை தண்டனையை குறைத்து மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது; பொய் செய்தியை வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 84 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது; இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பொய் செய்திக்கான 10 ஆண்டுகள் சிறையை 6 ஆண்டுகளாக குறைத்து மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
விளையாட்டு
# பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு அமராவதியில் ஆந்திர முதல்வர் துணை ஆட்சியருக்கான பணி நியமன உத்தரவை வழங்கி சிறப்பித்தார்


No comments:

Post a Comment