Followers

Mar 29, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [மார்ச் 29, 2018]


# இன்று மாலை (மார்ச் 29, 2018) பி.எஸ்.எல்.வி-எஃப் 08 விண்கலம் மூலமாக, ஜி-சாட்-6ஏ செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளது இஸ்ரோ

# உச்ச நீதிபதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க கோரி தீர்மானத்தை வழிமொழிய காங்கிரள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு
- தலைமை நீதிபதிக்கு எதிராக மக்களவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர 100 எம்.பி.க்கள் ஆதரவும் மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் ஆதரவும் தேவை. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

# 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற கெடு இன்றுடன் முடிகிறது; மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் தமிழக அரஷ்

# தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வு (2.44 காரணி உயர்வு) சரியானது தான்: உயர் நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் நீதிபதி இ. பத்மநாபன்

# தேசிய மருத்துவ கமிஷன் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியது

# இந்திய அரசால் வழங்கப்பட்ட ரூ. 288 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை தூறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
- யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை இலங்கையின் பிற பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய இடமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் (ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்தில் இருந்து 35 நாட்டிக்ல் மைல்) உள்ள துறைமுகம் ஆகும்.

# தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சக்ம் முடிவு

# எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் கிரீமிலேயர் முறை கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

# அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒத்துழைத்தால் அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்: சீன அதிபர் திரு. ஜி ஜின்பிங்கை சந்தித்த வடகொரிய அதிபர் திரு. கிம் ஜாங் தகவல்

# மியான்மர் நாட்டின் புதிய அதிபராக திரு. வின் மையிண்ட் தேர்வு

# நிறுவனங்களின் விதிமுறைகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட உதய் கோடக் குழுவின் பகுதி அளவு பரிந்துரைகளை செபி ஏற்றுக்கொண்டுள்ளது
- உதய் கோடக் தலைமையிலான குழு 80-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 15 பரிந்துரைகள் சிறிய மாற்றங்களுடன் ஏற்கப்பட்டன. 18 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.

# பங்கு விலக்கல் மூலம் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் 76% பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ள திட்டமிட்டிருக்கீறது. மீதமுள்ள 24% பங்குகள் அரசின் வசம் இருக்கும்

# தென் ஆப்பிராக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தி மோசடி செய்ய முன் கூட்டியே திட்டமிட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதேவேளையில் பந்த சேதப்படுத்தும் பணியை செய்த பாங்கிராப்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது

# ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை முஸ்கான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்
- அதேவேளையில் 25மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது; முஸ்கான், மனு பாகர் மற்றும் தேவன்ஷிரானா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்தையும், கவுர், மகிமா துர்கி அகர்வால் மற்றும் தனு ராவல் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது
- இத்தொடரில், இதுவரை இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது [முதலிடத்தில் சீனா: 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம்]

# இந்தியாவின் மிர்னலின் தயால் மற்றும் யோகேஷ் குமார் ஆகிய இருவர் 2018ம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; 53 காமன்வெல்த நாடுகளிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment