Followers

Mar 28, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [மார்ச் 25-28, 2018]

25-03-2018

# ஜெர்மனி அதிபர் திரு. பிராங்க்-வால்ட்டர் ஸ்டெயின்மீயர் இந்தியா வந்தார்
# மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 79-வது ஆண்டு விழா ஹரியாணா மாநிலம் குருகிராமில் நடைபெற்றது. விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தியாவில் மாவோயிஸம் முற்றிலும் வலுவிழந்துவிட்டதாக தெரிவித்தார்
# மார்ச் 2018-ல் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல் மூலம், பா.ஜ.க.வின் பலம் 58-லிருந்து 69-ஆக உயர்ந்துள்ளது; அதுபோல காங்கிரஸின் பலம் 54-லிருந்து 50-ஆக குறைந்துள்ளது
# “ஆள் கடத்தல்” தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஆள் கடத்தல் சம்பவங்கள், மனித சமூகத்துக்கு மிகப் பெரிய துயரமாகவும், அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
# கர்நாடகா: தனி மதமாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்திகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்து கர்நாடகா அரசு ஆணை பிறப்பித்துள்ளது
# இஸ்ரேலுக்கு எதிரான போக்கை கடைபிடித்தால் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது
# மத்திய கிழக்கு நாடுளைல் தஞ்சம் அடைந்துள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க ஐ. நா. சார்பில் யு.என்.ஆர்.டபில்யு. ஏ. (UNRDWA) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஐ. நா. மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, கத்ஹ்டார், நார்வே, துருக்கி, கனடா, சுவிட்சார்லாந்து உள்ளிட்ட 20 நாடுகள் 10 கோடி டாலர் வரை நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. இதில் இந்தியா 50 லட்சம் டாலர் (ரூ. 32 கோடி) அளிக்க முன்வந்துள்ளது.
# “தூய்மை இந்தியா” திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது
# உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
# இலங்கை கடற்படைக்கு நவீன ரோந்து கப்பலை இந்தியா வழங்கியுள்ளது. முன்னதாக ஜூலை 2017-ல் ஒரு ரோந்டு கப்பலை இந்தியா, இலங்கைக்கு வழங்கியது; தற்போது (மார்ச் 2018) வழங்கியள்ளது 2-வது ரோந்து கப்பலாகும்
# காசநோய் இல்லா சென்னையை உருவாக்கும் நோக்கில், மாநகராட்சி மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து “ரீச்” அமைப்பு நிறுவியுள்ள 35 நட்சத்திர மையங்களை முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். அத்துடன் காசநோயாளிகளுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
# மார்ச் 24: உலக காசநோய் தினம்; கருப்பொருள்: “காசநோய் இல்லா உலகம் – தலைவர்கள் தேவை
- 2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இந்திய அரசு 2025-க்குள் காச நோய் இல்லாத இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி செய்துள்ளது
# ஈரோடு மாவட்டம், கொடுமணலில் அகழாய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர் மத்திய தொல்லியல் துறையினர். இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாதிரி பொருட்கள் எல்லாம் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று முதலில் அறியப்படுள்ளது
- சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் கொடுமணல் (கொடுமணம்) சிற்றூர் பாடப்பெற்றுள்ளது. “கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு…” என்று நீள்கிறது கபிலரின் பாடல்.
- நொய்யலாற்றின் இருகரைகளில் அமைந்துள்ளது கொடுமணல். கபிலர், அரிசில் கிழார் பாடல்கள் கொடுமணலில் செய்யப்படும் கல்மணி அணிகலன்களை புகழ்வதற்கேற்ப இன்றைக்கும் இங்கெ உள்ள தோட்டங்காடுகள், ஆற்றங்கரைகள் போன்ற இடங்களில் வண்ண வண்ணக் கல்மணிகள், முதுமக்கள் தாழிகள், பிராமி எழுத்துக்களுடன் கூடிய மண்பாண்ட ஓடுகள் கிடைப்பது வாடிக்கை
# 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை – சேலம் இடையே விமான சேவை தொடங்கியுள்ளது (மார்ச் 25, 2018 முதல்); ட்ரூ ஜெட் விமான நிறுவனம் சென்னை – சேலம் இடையே 72 இருக்கைகள் கொண்ட விமானத்தை இயக்குகிறது
# வணிக சிக்கல்களுக்கான தேசிய கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதைத் தடுக்க வணிக நிறுவன வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார்
# ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் தங்கப் பதக்கம் வென்றார்
தங்கப்பதக்கம்
(01) மனு பாகர்: 10மீ ஏர் பிஸ்டல்
(02) மனு பாகர், ரானா, மகிமா அகர்வால் – 10மீ ஏர் பிஸ்டல் அணி
வெள்ளிப்பதக்கம்:
(01) கவுரவ் ரானா – 10மீ ஏர் பிஸ்டல்
 26-03-2018
# ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மற்றும் லண்டனில் ஆர்ப்பாட்டம்

# விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களுக்கு நியாய வியலை கிடைப்பதை உறுதி டெய்ய நாடு முழுவதும் வேளாண் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர், திரு. நரேந்திர மோடி
- 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு உயர்த்துவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழு (அசோக் தள்வாய்) தனது இறுதி அறிக்கையை அடுத்த மாதம் தாக்கல் ஸ்ய்ய இருக்கிறது
# ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய – மியான்மர் நாடுகளின் கடற்படையின் கூட்டு பயிற்சி (IMNEX-18) தொடங்கியது
# தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு; 7% முதல் 10% வரை அதிகரிக்க வாய்ப்பு [தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன]
# ஜெர்மனி அதிபர், திரு. பிராங் வால்டர் ஸ்டைன்மெயர் சென்னை வந்துள்ளார்
# சேலம் – சென்னை பயணிகள் விமான சேவையை (ட்ரூ ஜெட்) துவக்கி வைத்தார் முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி; திருச்சியிலிருந்து தில்லி மற்றும் மும்பைக்கு (ஜெட் ஏர்வேஸ்) நேரடி விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது
# டோக்லாம் விவகாரம்: எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
# பிளாஸ்டிக் பைகளுக்கு மகாராஷ்ட்ரா அரசு தடை விதித்துள்ளது; வணிகர்கள், உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பைகளை கைவிட ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும்; பின்னர், தடையை மீறுவோருக்கு ரூ. 5, 000 அபராதம் விதிக்கபடும்;  இந்தியாவில் 17 மாநிலங்களில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்லது. 18-வது மாநிலமாக மகாராஷ்ட்ராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது
# இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் பறிமுதல் 300% அதிகரிப்பு: மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு
- ஓப்பியம் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்கள்: (1) பஞ்சாப் (2) ராஜஸ்தான்
- ஹெராயின் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்கள்: (1) குஜராத் (2) பஞ்சாப்
- கஞ்சா அதிகமாக பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்கள்: ஆந்திர பிரதேசம்
# பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து வங்கிகளையும் தனியார் மயமாக்க வேண்டும்: நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர், திரு. அர்விந்த் பனகாரியா; 2019-ம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் இதனை வாக்குறுதியாக வழங்குவது குறித்து அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
# பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது ஐ.சி.சி.; மேலும் போட்டியின் ஊதியத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதுபோல டேவிட் வார்னருக்கு 75% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
# ஏப்ரல் 9 – 13 தேதிகளில் இங்கிலாந்தில் உள்ள ஆறு நகரங்களில் “தேசிய சமோசா வாரம்” நடத்தப்படவுள்ளது
# காமன்வெல்த் 2018 விளையாட்டு போட்டியில் இந்திய தேசிய கொடியை பாட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து ஏந்தி செல்வார்
# இந்த ஆண்டிற்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெறும். இந்த ஆண்டின் முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி மெல்போர்னில் நடந்தது. இதில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் பட்டத்தை வென்றார்
27-03-2018
 # தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது
- அப்பகுதியில் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததை அடுத்து இத்திட்டதிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இம்மலையில் சுமார் ரூ. 1, 500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆய்வுமையம் அமைத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது
- இந்த திட்டத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது
# இந்தியாவில் முதல்முறையாக கோவையில் பூச்சி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி
- இந்த அருங்காட்சியகத்தை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது
# மலேசியா: பொய் செய்திகளை வெளியிட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர மலேசிய அரசு முடிவு செய்துள்ளது
# கடந்த 1973-ம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் உள்ள அலக்நந்தா என்ற இடத்தில் (இப்போது உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ளது) வனப்பகுதியில் மரங்களை அழித்ஹ்டு வீடு கட்ட அரசு இடம் ஒதுக்கியது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சாண்டி பிரசாத் பட் என்பவர் தலைமையில் பழங்குடியின கிராமப் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மரங்களைச் சுற்றி கைகோர்த்து நின்றபடி பெண்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தனால், மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டன. இந்த இயக்கம் “சிப்கோ” இயக்கம் என்று அழைக்கப்பட்டது. சிப்கோ இயக்கத்தில் 45-வது ஆண்டை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்திருந்தது.
# முஸ்லிம் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள நிக்காஹ் ஹலாலா மற்றும் பல தார மணதுக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை அரசிய சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்
- பல தார மணம் என்பது மாணமான ஒரு முஸ்லிம் ஆண் தனது மனைவியை விவகாரத்து செய்யாமல் மேலும் 3 பெண்களை மணமுடிக்க அனுமதிப்பது ஆகும்
- நிக்காஹ் ஹலாலா என்பது விவகாரத்து செய்த தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முறையாகும்.
- முஸ்லிம் பெண்களை அவரது கணவன்மார்கள் விவாகரத்து செய்ய ஒரே சமயத்தில் 3 முறை “தலாக்” கூறும் முறை சட்ட விரோதம் என அச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2017-ல் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக சட்டம் இயற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது
- முத்தலாக் வழக்கு தொடரப்பட்டபோதே நிக்காஹ் ஹவாலா, பல தார மாணத்தை எதிர்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முத்தலாக் மனுவை மட்டும் விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மற்ற விவகாரங்களை பின்னர் விசாரிப்பதாக தெரிவித்தது
# இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், திரு. சுரேஷ் பிரபு
- 2013-ம் ஆண்டுக்குப் பீறகு 16 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்பும் இந்த ஒப்பந்தத்துக்கான தீர்வு எட்டப்படவில்லை
- இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பிடிஐஏ) என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் கடந்த ஆண்டும் பேச்சுவார்த்தை நடத்தின
# ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை காமன்வெல்த விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் சார்பில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய விளையாட்டு துறை அமைச்சகம்.
- இந்தியாவின் சார்பில் 325 பேர் செல்கின்றனர்; இவர்களில் 221 பேர் விளையாட்டு வீரர்கள்; பயிற்சியாளர்கள் 58 பேர்; மருத்துவர்கள் 17 பேர்; அணி மேலாளர்கள் 7 பேர்; அதிகாரிகள் 22 பேர்
- தனிநபர் விளையாட்டுகளில் அதிகபட்சமாக தடகளத்தில் 31 பேரும், துப்பாக்கி சுடுதலில் 27 பேரும் கலந்து கொள்கின்றனர்; இதற்கு அடுத்தப்படியாக பளுதூக்குதலில் 16 பேரும், மல்யுத்தத்தில் 12 பேரும் களமிருங்குகின்றனர்
# ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா ஆடவருக்கான 25மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்
- இதே பிரிவில் அனிஷ் பன்வலா, ஜவான்டா, ஆதர்ஷ் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி குழு பிரிவில் அதிக புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது
 28-03-2018
# கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ம் தேதி தேர்தல்; மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: இந்திய தேர்தல் ஆணையம்; கர்நாடக சட்டபேரவை தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்க, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக முன்னாள் கிரிகெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்
# தீர்ப்பு வழங்கிய பின்பு தீர்ப்பு பற்றி எங்கும் விமர்சனம் செய்யாதீர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் முடிகிறது; நீதிமன்ற அவம்திப்பு தொடர தமிழக அரசு ஆலோசனை
# அரசியல் கலப்பின்றி தூத்துக்குடி மக்கள் எழுச்சியின் காரணமாக தீவிரமாகும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள்
# ரூ. 2, 500 கோடிக்கு ஈவுத்தொகை விநியோக வரி செலுத்தாமல் இருந்ததால் பிரபல ஐ. டி. நிறுவனமான காக்னிசென்ட்டின் (Cognizant) வங்கி கணக்குகளை முடக்கியது வருமானவரித்துறை
# அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை: மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர், திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்
# குற்றவாளிகள் தொடங்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதா என்பது குறித்து வரும் மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் முடிவை அறிவிக்க உள்ளது
# இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய, இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: இலங்கை பிரதமர், திரு. ரணில் விக்ரமசிங்க
# வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறப்பு ரயில் மூலம் ரகசியமாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
# ஜூன் 2018-க்குள் இந்தியாவில் 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தப்படும்: தொலைத் தொடர்பு துறை
# விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதக் கப்பலை 10 ஆண்டுகள் கழித்து இலங்கை கடற்படை கொழும்பு அருகே நடுக்கடலில் மூழ்கடித்தது

No comments:

Post a Comment