# மார்ச்
22: உலக தண்ணீர் தினம்; கருப்பொருள்: “இயற்கைக்கு தண்ணீர்”
# தம்ழ்நாட்டில் 7 பல்கலைக்கழகங்களுக்கு
யு.ஜி.சி. தன்னாட்சி அந்தஸ்து (சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை அமிர்தா பல்கலைக்கழகம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவ பல்கலைக்கழகம், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும்
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம்)
# இராக்கில் தீவிரவாத குற்றங்கள்
அல்லது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு 19 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
# மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு
எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை உடனடியாக
திருத்தியமைக்க வேண்டும்: தமிழக எதிர்க்கட்சி தலைவர், திரு. மு. க. ஸ்டாலின்
# இந்திய தேர்தல் நடைமுறையில்
தலையிட்டால் “பேஸ்புக்” மீது கடும் நடவடிக்கை: மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும்
சட்டத்துறை அமைச்சர், திரு. ரவிசங்கர் பிரசாத்
- இங்கிலாந்து தலைநகர் லண்டனை
தலைமையிடமாகக் கொண்டு “கேம்பிரிட்ஜ் அனலிட்டகா” என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம்
தேர்தலில் வியூகங்கள் வகுப்பதற்கு வசதியாக பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வழங்கி வருகிறது
அதற்காக கோடிக்கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை முறைகேடாக சோதனை செய்துள்ளது.
அதற்கு பேஸ்புக் நிறுவனமும் தனது பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு
வழங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
# இந்தியாவில் 4 லட்சத்துக்கும்
மேல் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்: மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்; அதிகபட்சமாக
மேற்குவங்க மாநிலத்தில் உள்ளனர், அதற்கு அடுத்ததாக, உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம்
மாநிலங்களில் உள்ளனர்
# மியானமர் அதிபர் திரு.
ஹதின் கியா திடீர் ராஜினாமா; அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, துணை அதிபரான
திரு. மியிண்ட் ஸ்வே தற்காலிக அதிபராக செயல்படுவார்
# சுற்றுலா பயணிகள் அதிகமாக
வந்துசேரும் இடங்களில் புது தில்லிக்கு உலக அளவில் 22-வது இடமும், ஆசிய அளவில் 8-வது
இடமும் கிடைத்துள்ளது: டிரிப் அட்வைசர் நிறுவனம்
- உலக ஆளவில் அதிக சுற்றுலாப்
பயணிகளைக் கவரும் 25 இடங்களின் பட்டியலை வெளியிட்டது டிரிப் அட்வைசர் நிறுவனம்; இப்பட்டியலில்
பாரிஸ் முதலிடத்தையும் அதற்குடத்தப்படியாக லண்டன், ரோம், பாலி மற்றும் கிரிடி நகரங்கள்
உள்ளன
- ஆசிய அளவில், தில்லி
8வது இடத்திலும், கோவா 9வது இடத்திலும் மற்றும் ஜெய்ப்பூர் 16வது இடத்திலும் உள்ளன
# மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்:
பிராதன் சுற்றுக்கு இந்தியாவின் பூகி பாம்ப்ரி முன்னேற்றம்
# 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை
கிரிக்கெட் தோடருக்கான தகௌதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது; இதில் மேற்கு
இந்திய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 2019 உலக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது
# ஹெலினிக் விண்வெளி மையம்
என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளது கிரீஸ் நாடு
# 2018 ஏபல் பரிசுக்கு (கணித
தூறையின் நோபல் பரிசும் என்று இந்த விருதினை அழைப்பர்) கனடா நாட்டைச் சேர்ந்த கணிதாய்வாளர்
ராபர்ட் லாங்க்லாண்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
# ஆப்பிரிக்காவில்
அடுத்த 4 ஆண்டுகளில் (2018-2021) 18 புதிய இந்திய தூதரகங்களை திறக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
# 2020, மார்ச் வரை ரூ.3000
கோடி நிதி ஒதுக்கீட்டுடன் வட-கிழக்கு தொழில் வளர்ச்சித் திட்டம் (என்.இ.ஐ.டீ.எஸ்.)
2017-ற்கு மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
# மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், தேசிய
சுகாதார இயக்கத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பாக, ரூ.85,217 கோடிக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும்
ஒப்புதல் அளிக்கப்பட்டது.
# மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிநாடு
வாழ் இந்தியர்களின் இந்தியா
மேம்பாட்டு நிறுவனத்தை (India
Development Foundation of Overseas Indians (IDF-OI)) மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய தூய்மைக் கங்கைத் திட்டம் மற்றும்
தூய்மை இந்தியா இயக்கம் (National Mission for clean Ganga and Swachh
Bharat Mission) ஆகிய இந்திய அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு
புலம்பெயர் இந்தியர்கள் அளிக்கும் நிதியைத் தொகுத்து அளிப்பதற்கு வசதியாக இந்த முடிவு
எடுக்கப்பட்டது.
# மத்திய
அமைச்சரவை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும்
ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒப்புதலை வழங்கியது.
No comments:
Post a Comment