Followers

Apr 4, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [04-04-2018]


*தமிழகம்*
# தமிழகத்தில் காவிரி போராட்டம் உச்சகட்டம்; பேருந்து, ரயில், விமான நிலையங்கள் முற்றுகை; ஆளும் அ.இ.அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் கடைபிடிப்பு; எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழுஅடைப்பு
- சமூக வளைதளங்களில் #IndiaBetraysTN, #WeWantCMB; #GoHomeOPSnEPS போன்றவை ட்ரெண்ட் (Trend) ஆகி வருகின்றன

# நாட்டிலேயே முதல்முறையாக தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முப்பருவ பாடத்திட்ட மூறையை காஷ்மீரில் செய்லபடுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக காஷ்மீர் மாநில உயரதிகாரிகள் தமிழகம் வந்து அந்த நடைமுறையை பெற்றி கல்வித்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசித்தனர்

# தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியாகிவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
*இந்தியா*
# எஸ்சி, எஸ்டி மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட நடைமூறையில் மாற்றம் செய்து சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது

# குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தில் ஆனைப் புளிய மரக்கன்றை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நட்டு வைத்தார்.
- குடியரசுத் தலைவர் மார்ச் மாதம் அரசுமுறைப் பயணமாக மடகாஸ்கர் சென்றபோது, அந்நாட்டின் அன்டாநானாரிவோ பல்கலைக் கழக வளாகத்தில் வேப்ப மரக்கன்றை நட்டு வைத்ததற்கு மாற்றாக, இந்த ஆனைப் புளிய மரக்கன்று மடகாஸ்கர் பல்கலைக் கழகத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தகையஆனைப் புளிய மரங்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல், வாழக் கூடியவையாகும். 
- இவற்றில், வேப்ப மரத்தைப் போன்றே  அதிக அளவு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- இந்த மரக்கன்றுகள் பரிமாற்றம், இந்தியாவும், மடகாஸ்கரும் தத்தமது பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரம் மீது கொண்டுள்ள நன்மதிப்புக்களைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

# இந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது; சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரூ ஐஐஎஸ்சி நிறுவனம் தேர்வாகியுள்ளது: மத்திய மனிதவள மெம்பாட்டு அமைச்சகம்
- சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனம்: இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், அகமதாபாத் (ஐஐஎம்-ஏ)
- சிறந்த கல்லூரி: தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் “மிரண்டா ஹவுஸ்”
சிறந்த மருத்துவக் கல்லூரி: தில்லி எய்ம்ஸ்
சிறந்த சட்டக் கல்லூரி: தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூரூ

# வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதில்லை என மனிதவள மேம்பாட்டு அமைச்சக முடிவு செய்துள்ளது

# பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்வது தொடர்பான உத்தரவை வாபஸ் பெறுமாறு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர், திரு. நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்

# காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது; தீர்வு காண ஐ.நா. பொதுச்செயலாளர், திரு. அந்தோனியோ குத்தேரஸ் வலியுறுத்தல்

# இராக் நாட்டின் மொசுலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் உதவித் தொகையாக தரப்படும் என பிரதமர், திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்

# ராணுவத்திற்கான ஊதிய தொகுப்பு  தொடர்பாக, இந்திய ராணுவத்திற்கும் ஹெச்.டி.எப்.சி. வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹெச்.டி.எப்.சி. (HDFC) வங்கிக்கும், ராணுவத்திற்கும் முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 2011-ல் கையெழுத்திடப்பட்டு, 2015 மார்ச் 13 அன்று புதுப்பிக்கப்பட்டது.  பணியில் உள்ள ராணுவ வீர்ர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
*வெளியுறவு*
# இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு முதல் முறையாக கண்டெயினர் ரயில் போக்குவரத்து தொடங்கியது (கொல்கத்தா – டாக்கா); முதல் கண்டெயினர் ரயில், 1, 100டன் மாட்டுத் தீவனத்தை ஏற்றிச் சென்றது
*உலகம்*
# சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதுவின் மில்லி முஸ்லீம் லீக் கட்சியை தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது

# இலங்கை நாடாளுமன்றத்தில், பிரதமர், திரு. ரணில் விக்கரமசிங்கேவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
*வணிகம்*
# புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்றுமதியை எளிமைப்படுத்துவதற்காக ஏற்றுமதி ஆய்வுக்குழு மேற்கொண்டுள்ள  டிஜிட்டல் முன்முயற்சிகளை மத்திய வர்த்தகம், தொழில் துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
*விளையாட்டு*
# ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது [ஏப்ரல் 04 – 15, 2018]; 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6, 600 வீரார், வீரங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழா அணி வகுப்பில் இந்திய அணிக்கு பாட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து தலைமை ஏற்று தேசிய கொடி ஏந்தி செல்வார்
# ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தோலிக்காட்சிகளி ஒளிப்பரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என். டி. ஆர். நியமனம் செய்யப்பட்டுள்ளார்


No comments:

Post a Comment