Followers

Apr 3, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [03-04-2018]


*தமிழகம்*
# காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளஸ்கீம்” (செயல் திட்டம்) என்கிற வர்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்; அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது என்றார்.

# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தமிழக ஆளுநர், திரு. பன்வாரிலால் புரோஹித் தில்லி சென்றுள்ளார். மத்திய அரசு அழைப்பின் பேரில் சென்றுள்ள அவர், தமிழக நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது

# பழநி தண்டாயுதபாணி கோயிலில் புதிய பஞ்சலோக உற்சவர் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு, இந்த வழக்கை சி.பி.சி..டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. திரு. டி. கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்

# ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்ட மக்கள், மாணவர்கள்: போராட்டக்களமாக மாறிய தூத்துக்குடி

# சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடங்கியது [மார்ச் 31 – ஏப்ரல் 29 வரை]; சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில்தமிழ் மொழி கவுண்சில்தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது

*இந்தியா*
# எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வட மாநிலங்களில் கலவரம் நடந்தது. இதில் நடந்த  துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி. கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு அதிரடைப் படை அனுப்பப்பட்டுள்ளது
- எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களில் அரசு ஊழியர்கள், தனிநபர்களை உடனடியாகக் கைது செய்யக்கூடாது; உரிய விசாரணைக்குப் பிறகே கைது செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது

# நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற எம்பிக்கள் நிலைக்குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது

# மறைந்த தத்துவ ஞானி மற்றும் அரசியல்வாதியான தீன் தயாள் உபாத்யாயா குறித்ததிங்க் இந்தியா“ (Think India) என்ற ஆய்விதழின் முதல் நகலை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் பெற்றுக் கொண்டார்.


*மாநிலங்கள்*
# கோவாவில் கொங்கண் ரயில் பாதையில் மட்காவ் அருகேபல்லி ரயில் நிலையத்தில் பல்முனை மாதிரி தளவாடப் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது

# மேற்கு வங்கம்: பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு திருமண உதவி வழங்கும் திட்டமான் "ரூபஸ்ரீ" திட்டத்தை ஆரம்பித்துள்ளது அரசு
*உலகம்*
# விண்வெளியில் செயலிழந்து சுற்றிக்கொண்டிருந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம் (“டியான்காங்-1”), பசிபிக் கடலில் விழுந்தது.

# இஸ்ரேல் ராணுவ துப்பக்கிச் சூட்டில் 18 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தது தொடர்பாக சுதந்திரமான விசாரனை நடத்த வேண்டும் என்ற . நா.வின் கோரிக்கையை நிராகரித்தது இஸ்ரேல்

*வணிகம்*
# இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பான நாஸ்காம் (NASSCOM) தலைவராக தேப்ஜானி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் பதவியை வகித்தவராவார். இந்த அமைப்பின் முதல் பெண் தலைவராக இவராவார்.

*விளையாட்டு*
# டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரபேல் நடால் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.


No comments:

Post a Comment