Followers

Apr 9, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [ஏப்ரல் 09, 2018]


*தமிழகம்*
# காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

# அரசு பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய நிறத்தில் சீருடைகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன; 9, 10-ம் வகுப்பு மணவர்களுக்கு சாம்பல் நிற பேண்டும், இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய சாம்பல் நிற கோட்டும் சீருடையாகிறது. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருநீல பேண்டும், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய கருநீலகோட்டும் நடைமூறைப்படுத்தப்பட உள்ளன; 9 முதல் 12ம் படிக்கும் மாணவ – மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சீருடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும்

# விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சேர்ந்த பல் அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன; மாங்குடியில் ரோமானிய மட்பாண்ட வகை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன; வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த முக்கிய பகுதியாக மாங்குடி இருந்திருக்கிறது 

*இந்தியா*
# சென்னை அருகே நடக்கவுள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்க சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், திருமதி, நிர்மலா சீதாராமன்

# ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது கூறித்து ஆராய்ச்சி நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. அரவிந்த் ஜம்கேத்கர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்

*வெளியுறவு*
# அருணாச்சல் எல்லையில் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர் என்ற சீனாவின் புகாரை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது; அருணாச்சல் பிரதேச எல்லையில் உள்ளது அசபிலா. இது இந்திய எல்லைக்குட்பட்ட பகுதி. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசபிலா பகுதியில் எல்லை மீறி இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்திருந்தனர்.

# இந்தியா மற்றும் தென்கொரியா இடையே துறைமுகங்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன 

*உலகம்*
# பாகிஸ்தான்: தீவிரவாதி ஹபிஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத் தவா உள்ளிட்ட பல்வெறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது

# ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியா நாடுகள் இணைந்து ராணுவ கூட்டுபயிற்சி (Exercise DESERT TIGER 5) – ஐ மேற்கொண்டது

*வணிகம்*
# வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மற்றும் மெகுல் ஸோக்ஸி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை பீறபிக்கப்பட்டுள்ளது


*விளையாட்டு*
# 2018 காமன்வெல்த் விளையாட்டு: 4-ம் நாளில் இந்தியா 3 தங்கம் வென்றது
- தங்கம்: பூனம் யாதவ் – பளுதூக்குதல் 63கி (பெண்கள்)
- தங்கம்: மனு பாகர் – துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் (பெண்கள்)
- தங்கம்: டேபிள் டென்னிஸ் மகளிர் அணி
- வெள்ளி: ஹீனா சித்து – துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் (பெண்கள்)
- வெண்கலம்: ரவி குமார் – துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் ரைபிள் பிஸ்டல் (ஆண்கள்)
- வெண்கலம்: விகாஷ் தாக்குர் - – பளுதூக்குதல் 94கி (ஆண்கள்)
- இது வரை இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப்பட்டியில் 4-ம் இடத்தில் உள்ளது



No comments:

Post a Comment