Followers

Showing posts with label முக்கிய நிகழ்வுகள். Show all posts
Showing posts with label முக்கிய நிகழ்வுகள். Show all posts

Jun 1, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [01-06-2018]

*தமிழகம்*
# 17வது உலக தமிழ் இணைய மாநாடு கோயம்புத்தூரில்,Intellectual Tamil Search Engines என்ற கருப்பொருளில் ஜூலை 06 – 08, 2018 தேதிகளில் நடைபெறும்

# இரு முறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழறிஞர் ம.லெ. தங்கப்பா காலமானார்
*இந்தியா*
# 10 மாநிலங்களில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தோல்வி

# மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது

# நாடுமுழுவதிலும் உள்ள மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) மீண்டும் நடைபெற உள்ளது. 

*மாநிலங்கள்*
# ஆந்திர பிரதேசம்: மாநிலம் பிரிந்து 4 வருடங்கள் கழித்து, மாநிலத்துக்கென்று மாநில சின்னங்களை அறிவித்தது அரசு

*வெளியுறவு*
# மலேசிய பிரதமர், திரு. மகாதிர் முகமதுவை கோலால்ம்பூரில் சந்தித்து பேசினார், இந்திய பிரதமர், திரு. நரேந்திர மோடி

# சிங்கப்பூர் பிரதமர், திரு,. லீ சியங் லூங்கை சந்தித்து பேசினார், இந்திய பிரதமர், திரு. நரேந்திர மோடி; செல்போனில் பணபரிமாற்றம் செய்வதற்கான செயலிகளான பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ. (ரூபே) மற்றும் எஸ்.பி.ஐ. ஆகிய இந்திய செயலிகளை சிங்கப்பூரில் பிரதமர் திரு. மோடி அறிமுகப்படுத்தினார்

*உலகம்*
# சிங்கப்பூர் முதல் நியூயார்க் (நெவர்க் விமான நிலையம்) வரியயில் நீண்டதூர விமான சேவையினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் இந்த சேவை செயல்படத் தொடங்கும். 16, 700 கிலோமீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 45 நிமிடத்தில் இந்த விமானம் கடக்கும். இந்த விமான சேவை நடைமுறைக்கு வரும் போது, இதுதான் நீண்ட தூரம் நிற்காமல் பயணிக்கும் விமானமாக இருக்கும் (தற்போது, தோஹா முதல் ஆக்லாந்து வரையில் இயக்கப்பட்டு வரும் விமான சேவையே நீண்ட தூரம் நிற்காமல் பயணிக்கும் விமானமாக இருக்கிறது)

*இதர*
# ஜூன் 01: உலக பால் தினம்
# ஜூன் 01: சர்வதேச பெற்றோர்கள் தினம்




Apr 9, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [ஏப்ரல் 09, 2018]


*தமிழகம்*
# காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது

# அரசு பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய நிறத்தில் சீருடைகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன; 9, 10-ம் வகுப்பு மணவர்களுக்கு சாம்பல் நிற பேண்டும், இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய சாம்பல் நிற கோட்டும் சீருடையாகிறது. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருநீல பேண்டும், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய கருநீலகோட்டும் நடைமூறைப்படுத்தப்பட உள்ளன; 9 முதல் 12ம் படிக்கும் மாணவ – மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சீருடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும்

# விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சேர்ந்த பல் அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன; மாங்குடியில் ரோமானிய மட்பாண்ட வகை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன; வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த முக்கிய பகுதியாக மாங்குடி இருந்திருக்கிறது 

*இந்தியா*
# சென்னை அருகே நடக்கவுள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்க சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், திருமதி, நிர்மலா சீதாராமன்

# ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது கூறித்து ஆராய்ச்சி நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. அரவிந்த் ஜம்கேத்கர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்

*வெளியுறவு*
# அருணாச்சல் எல்லையில் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர் என்ற சீனாவின் புகாரை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது; அருணாச்சல் பிரதேச எல்லையில் உள்ளது அசபிலா. இது இந்திய எல்லைக்குட்பட்ட பகுதி. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசபிலா பகுதியில் எல்லை மீறி இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்திருந்தனர்.

# இந்தியா மற்றும் தென்கொரியா இடையே துறைமுகங்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன 

*உலகம்*
# பாகிஸ்தான்: தீவிரவாதி ஹபிஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத் தவா உள்ளிட்ட பல்வெறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது

# ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியா நாடுகள் இணைந்து ராணுவ கூட்டுபயிற்சி (Exercise DESERT TIGER 5) – ஐ மேற்கொண்டது

*வணிகம்*
# வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மற்றும் மெகுல் ஸோக்ஸி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை பீறபிக்கப்பட்டுள்ளது


*விளையாட்டு*
# 2018 காமன்வெல்த் விளையாட்டு: 4-ம் நாளில் இந்தியா 3 தங்கம் வென்றது
- தங்கம்: பூனம் யாதவ் – பளுதூக்குதல் 63கி (பெண்கள்)
- தங்கம்: மனு பாகர் – துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் (பெண்கள்)
- தங்கம்: டேபிள் டென்னிஸ் மகளிர் அணி
- வெள்ளி: ஹீனா சித்து – துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் (பெண்கள்)
- வெண்கலம்: ரவி குமார் – துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் ரைபிள் பிஸ்டல் (ஆண்கள்)
- வெண்கலம்: விகாஷ் தாக்குர் - – பளுதூக்குதல் 94கி (ஆண்கள்)
- இது வரை இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப்பட்டியில் 4-ம் இடத்தில் உள்ளது



Apr 8, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [08-04-2018]



*தமிழகம்*
# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவதால், சட்ட நிபுணர்களுடன் முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆலேசனை செய்தார்

# தமிழக அரசு “உழவன்” என்ற மொபைல் செயலியை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது


# காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் பரிசு

# கன்னியாகுமரி அருகே வர்த்தக துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கடல் முற்றுகை போராட்டம் நடத்தினர்

# தமிழ் வளர்ச்சிக்கான முக்கிய நோக்குகளுடன் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் மே 19, 20 ஆகிய தேதிகளில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு நடக்க உள்ளது

# அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரின் தேர்வை அரசியலாக்க வேண்டாம் என்றும் அந்த தேர்வானது எந்த தலையீடும் இல்லாமல் வெளிப்படையாக நியமனம் செய்யப்பட்ட ஒன்று என்று தமிழக ஆளுநர், திரு. பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்; தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிப்பதில்லி. இது போன்ற நியமனங்கள் வருத்தம் அளிக்கிறது என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், திரு. சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார் [நாடு முழுவதும் உள்ள 16 மத்திய பல்கலைக்கழக்ங்களில் ஒரு தமிழர் கூட துணைவேந்தராக பதவி வகிக்கவில்லை; திருவாரூரில் உள்ள மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிந்த ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை]

*வெளியுறவு*
# குடியரசுத் தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த் மூன்று ஆப்பிர்க்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 07 – 13, 2018); கினியா, சுவசிலாந்து மற்றும் ஜாம்பியா நாடுகளுக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்.

*விளையாட்டு*
# 2018 காமன்வெல்த் விளையாட்டு: 3-ம் நாளில் இந்தியா 2 தங்கம் வென்றது
- தங்கம்: சதீஷ்குமார் சிவலிங்கம் – பளுதூக்குதல் 77கி (ஆண்கள்)
- தங்கம்: வெங்கட் ராகுல் - பளுதூக்குதல் 85கி (ஆண்கள்)

# டேவிஸ் கோப்பையில் இந்தியா 3 – 2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இதன் மூலம், இந்தியா உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் லியாண்டர் பயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றனர். இந்த வெற்றி லியாண்டர் பயஸுக்கு டேவிஸ் கோப்பையில் 43வது வெற்றியாகும். இதன் மூலம் டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பயஸ். இதற்கு முன்னர், இத்தாலியில் நிக்கோலா 42 ஆட்டங்களில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.