Followers

Apr 7, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [07-04-2018]


*தமிழகம்*
# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் எதிர்க் கட்சித் தலைவர், திரு. மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது 

# அண்ணா பல்கலைக்கழக் துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு. எம். கே. சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் (ஆளும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மற்றும் பா.ஜ.க. தவிர)

# சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்களில் “அம்மா வை-பை” வசதியை முதல்வர், திரு. எடப்பாடி. கே. பழனிசாமி தொடங்கி வைத்தார்



*இந்தியா*
# நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

# ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர், திருமதி. சுமித்ரா மகாஜனிடம் வழங்கினார்கள்

# நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்து ஏப்ரல் 9-ம் தேதி காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளது

# நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதைக் கண்டித்து 12-ம் தேதி பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்: பிரதமர், திரு. நரேந்திர மோடி

*உலகம்*
# தென் கொரியா: ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் பெண் அதிபர், திருமதி. பார்க் கியூன் ஹை-க்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 # பிரேசில்: அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன் ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக, முன்னாள் அதிபர், திரு. லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை சிறையில் அடைக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

# மலேசியா: நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது; அந்த நாட்டு சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 505 மாகாண தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது

*வர்த்தகம்*
# ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பொருட்கல், குளிர்பானங்களுக்கு 5% GST வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

# பிட்காயின் உள்ளிட்ட கிர்ப்டோகரன்சிகளுக்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆரோய்வோம் எனத் தெரிவித்துள்ளது

*விளையாட்டு*
# 2018 காமன்வெல்த் விளையாட்டு: 2-ம் நாளில் இந்தியா 1 தங்கம் மற்றும் 1 வெண்கலம் வென்றது
- தங்கம்: சஞ்ஜிதா சானு – பளுதூக்குதல் 53கி (பெண்கள்)
- வெண்கலம்: தீபக் லெதர் - பளுதூக்குதல் 69கி (ஆண்கள்)

# 11வது ஐ.ப்.எல். டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது; முதல் போட்டியில் நடப்பு சாமியனான் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 2 ஆண்டுகள் தடைக்குப் பின்ன்ர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது; மொத்தம் 8 அணிகள் 60 போட்டிகளில் விளையாடும்

*இதர*
# ஏப்ரல் 07: உலக சுகாதார தினம்; கரு: Universal health Coverage: Everyone, Everywhere



No comments:

Post a Comment