தமிழகம்
# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை
கண்டித்து தமிழகத்தில் ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர்,
திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக்
கண்டித்து தமிழக் வாழ்வுரிமைக் கட்சியனர் உளுந்தூர்பேட்டை அருகே வாகன சுங்கச் சாவடி
வசூல் மையத்தை அடித்து நொறுக்கினர்; இது சமூக வளைதளங்களில் இளைஞர்களிடையே நல்ல வரவேறபை
பெற்றது
# தமிழகத்தில் பேறுகாலத்தின் போது ஏற்படும் தாய்,
சேய் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது: மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்,
திரு. சி. விஜயபாஸ்கர்
# பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சி. வி. ராஜேந்திரன்
உடல்நலக் குறைவால் காலமானார்
இந்தியா
# ஜிஎஸ்எல்வி – எஃப் 08 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட
ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பு திடீர் துண்டிப்பு
# காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்களில் 13 தீவிரவாதிகள்,
3 ராணுவ வீரர்களி பலி; பொதுமக்களில் 4 பேர் உயிரிழப்பு
# சிபிஎஸ்இ
வினாத்தாள் வெளியான விவகாரம்: டெல்லி தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட
3 பேர் கைது
மாநிலங்கள்
# உத்திர பிரதேசம்: பெரு நிறுவனங்களிடமிருந்து
பெறப்படும் சமூக மேம்பாட்டு நிதியைக் கொண்டு அயோத்தியில் 328 அடி (100 மீட்டர்) உயர
ராமர் சிலையை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது
# தெலங்கானா: தெலங்கானா போராட்ட சமிதியின் தலைவர்
கோதண்டராம் புதிய கட்சி தொடங்க உள்ளார்
வெளியுறவு
# இந்தியா – தென்கொரியா கடலோரக் காவல்படையின்
கூட்டுப் பயிற்சி (SAHYOG – HYEOBYEOG 2018) சென்னையில்
நடந்தது
உலகம்
# இலங்கை: பிரதமர், திரு. ரணில் விக்கிரம்சிங்காவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிபர் திரு. சிறிசேனா ஆதரவு அளிப்பார்: முன்னாள்
அதிபர், திரு. ராஜபக்ச
வணிகம்
# இனிமேல் புதிதாக கார் வாங்கும் போதே எண் பலகை
(நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டிருக்கும்; காரின் விலையில் எண் பலகைக்கான செலவும் சேர்க்கப்படும்
என மத்திய அமைச்சர், திரு. நிதின் கட்கரி தெரிவித்தார்
# மாநிலங்களுக்கு இடையெயான பொருள் பரிமாற்றத்துக்கு
இணைய வழியில் ரசீதுகளை உருவாக்கும் இ-வே பில் முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு
வந்திருக்கிறது. ரூ. 50, 000 – க்கும் அதிகமான விலையுள்ள பொருட்களை ஒரு மாநிலத்திலிருந்து
இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும்போது வர்த்தகர்களும், பொருட்களை எடுத்துச்
செல்பவர்களும் இந்த இ-வே பில்லை உருவாக்க வேண்டும்
விளையாட்டு
# சந்தோஷ் கோப்பை 2018 (கால்பந்து): மேற்கு வங்கத்தை
வீழ்த்தி கேரள் அணி சாம்பிய பட்டத்தை வென்றது
No comments:
Post a Comment