Followers

Apr 8, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [08-04-2018]



*தமிழகம்*
# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவதால், சட்ட நிபுணர்களுடன் முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆலேசனை செய்தார்

# தமிழக அரசு “உழவன்” என்ற மொபைல் செயலியை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது


# காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் பரிசு

# கன்னியாகுமரி அருகே வர்த்தக துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கடல் முற்றுகை போராட்டம் நடத்தினர்

# தமிழ் வளர்ச்சிக்கான முக்கிய நோக்குகளுடன் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் மே 19, 20 ஆகிய தேதிகளில் உலகத் தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடு நடக்க உள்ளது

# அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரின் தேர்வை அரசியலாக்க வேண்டாம் என்றும் அந்த தேர்வானது எந்த தலையீடும் இல்லாமல் வெளிப்படையாக நியமனம் செய்யப்பட்ட ஒன்று என்று தமிழக ஆளுநர், திரு. பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்; தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிப்பதில்லி. இது போன்ற நியமனங்கள் வருத்தம் அளிக்கிறது என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், திரு. சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார் [நாடு முழுவதும் உள்ள 16 மத்திய பல்கலைக்கழக்ங்களில் ஒரு தமிழர் கூட துணைவேந்தராக பதவி வகிக்கவில்லை; திருவாரூரில் உள்ள மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிந்த ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை]

*வெளியுறவு*
# குடியரசுத் தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த் மூன்று ஆப்பிர்க்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 07 – 13, 2018); கினியா, சுவசிலாந்து மற்றும் ஜாம்பியா நாடுகளுக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்.

*விளையாட்டு*
# 2018 காமன்வெல்த் விளையாட்டு: 3-ம் நாளில் இந்தியா 2 தங்கம் வென்றது
- தங்கம்: சதீஷ்குமார் சிவலிங்கம் – பளுதூக்குதல் 77கி (ஆண்கள்)
- தங்கம்: வெங்கட் ராகுல் - பளுதூக்குதல் 85கி (ஆண்கள்)

# டேவிஸ் கோப்பையில் இந்தியா 3 – 2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இதன் மூலம், இந்தியா உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் லியாண்டர் பயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றனர். இந்த வெற்றி லியாண்டர் பயஸுக்கு டேவிஸ் கோப்பையில் 43வது வெற்றியாகும். இதன் மூலம் டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பயஸ். இதற்கு முன்னர், இத்தாலியில் நிக்கோலா 42 ஆட்டங்களில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.



No comments:

Post a Comment