# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து
தமிழகம், புதுச்சேரியில் 05-04-2018 முழுஅடைப்பு; 90% கடைகள் அடைப்பு, தனியார் பேருந்துகள்
இயக்கப்படவில்லை, மறியல் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது, எதிர்ப்பை மீறி இயக்கப்பட்ட
அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது, முழு அடைப்பு காரணமாக தமிழகம், புதுச்சேரி
மாநிலங்கள் ஸ்தம்பித்தன
# தமிழக சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநரிடம் முதல்வர்
விளக்கம்
# சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ள பாதுகாப்பு
துறையின் பிரம்மாண்டமான டெபெக்ஸ்போ – 2018 கண்காட்சியை பிரதமர், திரு. நரேந்திர மோடி
வரும் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
# தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வர்களைக்
கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது
ஏற்படுத்தப்பட்டது, இதன்படி, 2016, 2017 ஆகிய ஆண்டுகளுக்கு மாவட்டத்துக்கு ஒருவர் வீதம்
64 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும்
விருதுத் தொகையாக ரூ. 25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்த விருதினை
முதல்வர், திரு. எடப்பாடி. கே. பழனிசாமி சான்றோர்களுக்கு வழங்கினார் ; அதுபோல
சித்திரைத் திருநாள் விருது 2017-ஐயும் வழங்கினார் [சித்திரைத் திருநாள் விருது – 2017ஐ வென்றவர்கள்]
# அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக திரு. எம். கே. சூரப்பா
நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான, திரு.
பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்தார். திரு. சூரப்பா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்
என்பதால், தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திரு.
பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக பதவியேற்ற பிறகு நியமித்த துணைவேந்தர்கள்
|
|||
#
|
பல்கலைக்கழகம்
|
துணை வேந்தர்
|
மாநிலம்
|
1
|
சட்டம்
|
சாஸ்திரி
|
ஆந்திரா
|
2
|
இசை
|
பிரமீளா குருமூர்த்தி
|
கேரளா
|
3
|
அண்ணா
|
சூரப்பா
|
கர்நாடகா
|
சூரப்பா, பிரமிளா மற்றும் சாஸ்திரி ஆகிய மூவரும் RSS பின்புலம்
கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் தமிழகத்தில் ஆளுநரின்
நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது
|
*இந்தியா*
# பொதுத் தேர்தலின் போது ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட
தடை விதிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது
# பல்வேரு பிரச்சனைகள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்
21-வது நாளாக முடக்கப்பட்டது
# பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை
சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர், திரு. ராதா மோகன்
சிங் தெரிவித்துள்ளார்
- சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம் முன்னிலையில்
உள்ளது. தவிர ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா,
கர்நாடகா, உத்திர பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பயிரடப்படுகின்றன
- 2018-ம் ஆண்டை “தேசிய சிறுதானியங்கள் ஆண்டு” என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
# மான் வெட்டையாடிய வழக்கில் இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு
5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம்
தீர்ப்பளித்தது
# அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 100 முக்கிய
நினைவிடங்களில் ஓய்வு அறைகள், குடிநீர், அமரும் பலகைகள், புத்தக கடைகள், மொழி மாற்று
மையங்கள், உணவகங்கள் போன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திட்டமிட்டுள்ளது [Adarsh Smarak]; தமிழ்நாட்டில் மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பெரிய போவில், வேலூர்க் கோட்டை, சித்தன்னவாசல்
குகை ஓவியங்கள், செஞ்சிக் கோட்டை, சுற்றியுள்ள சிறு கோயில்கள், கற்சுவர்கள், வடகிழக்கு
மூலையில் கற்சுவர்களை கொண்ட கிணறு ஆகியவற்றுடன் மூவர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர்
ஆலயம் ஆகியவை மத்திய அரசால் பாதுகாக்கப்படும். வரலாற்று சின்னங்களில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள
முக்கியமான சின்னங்களில் அடங்கும்.
# மத்திய கலாச்சார துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்களுக்கான
www.museumsofindia.gov.in என்ற தேசிய இணையப் பக்கத்தில் அருங்காட்சியகத்தில்
சேகரிக்கப்பட்டுள்ள கலைப்பொருட்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு புனேயில் உள்ள சி-டிஏசி
நிறுவனத்துடன் இணைந்து ஜாதான் என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தை கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
# உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அது தொடர்பான
துறைகளில் ஒத்துழைப்புக்காக சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இந்திய உணவுப்
பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்துக்கும், ஆப்கானிஸ்தானின் வேளாண்மை,
நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்பாட்டில்
கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
# மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வர்த்தக
தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை அமைக்கும் வகையில், இந்தியா மற்றும் ஈரான்
இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல்
அளிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை, பரஸ்பரம் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக
மேற்கொள்ளப்பட்டது. ஈரான் அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பிப்ரவரி 17,
2018-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
# மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் கனடா இடையிலான
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம்
புதுடெல்லியில் 2018 பிப்ரவரி 21 ஆம் தேதி கையெழுத்தானது.
# மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும்
பர்ன் ஸ்டான்டர்ட் கம்பெனி லிமிடட் ( Burn Standard Company Ltd (பி.எஸ்.சி.எல்)) என்ற
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தை மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
# மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்தியப் போட்டித் திறன்
ஆணையத்தில்(CCI) இடம்பெறுவோரின் எண்ணிக்கையைச் சீர்திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த ஆணையத்தில் ஒரு தலைவர் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் நியமிக்கப்படுவர்.
இதற்கு மாறாக, ஒரு தலைவர் மூன்று உறுப்பினர்கள் என மொத்தம் நான்கு பேரை மட்டுமே நியமிக்க
இந்த சீரமைப்பு வழிசெய்கிறது. தற்போதைய ஆணையத்தில் காலியாகும் இரு உறுப்பினர்களின்
பதவி நிரப்பப்பட மாட்டாது. மேலும், ஒரு கூடுதல் பதவியில் இருப்பவரின் பதவிக் காலம்
வரும் 2018, செப்டம்பரில் நிறைவடைகிறது. அத்தோடு அந்தக் காலியிடத்திலும் யாரும் நியமிக்கப்பட
மாட்டார்கள்.
# நாட்டில் மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு
ஆகியவற்றுக்காக மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா 2018க்கு மத்திய அமைச்சரவை
இன்று ஒப்புதல் அளித்தது.
*மாநிலங்கள்*
# மத்திய பிரதேசம்: நர்மதா நதி பாதுகாப்பு குழுவில் உறுப்பினர்களாக
நியமிக்கப்பட்ட 5 சாமியார்களுக்கு (பாபா நர்மதானந்த், பாபா ஹரிஹரானந்த், கம்ப்யூட்டர்
பாபா, பாயு மகராஜ் மற்றும் பண்டிட் யோகேந்திர மகந்த்) இணை அமைச்சர் அந்தஸ்து அளித்து
மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது
# கர்நாடகா: கோலார் மாவட்டத்தின் பெராபுராவில்
இருந்து 62 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையை பெங்களூருவுக்கு கொண்டு
சென்றன
# கர்நாடகா: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா மாநிலத்தின்
உரிமை பறிபோகும். எனவே அதனை கர்நாடக அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. எனவே மேலாண்மை
வாரியம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை மேலும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களால்
மத்திய அரசு பணியக் கூடாது - முதல்வர், திரு. சித்தராமையா
*வெளியுறவு*
# அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள்
மாநாடு நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர், திருமதி,
சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்
# சர்வதேச பாதுகாப்பு குறித்த 7வது மாஸ்கோ மாநாட்டில்
பங்கேற்றார் பாதுகாப்பு துறை அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன்.
- பாதுகாப்பு அமைச்சர், இந்திய ரஷ்ய
தூதரக உறவுகளின் 70 ஆண்டுகள் நிறைவை
குறிக்கும் வகையிலான கொண்டாட்டங்களின் நிறைவாக சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி
கான் நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார்.
*உலகம்*
# இந்தோனேசியா: போர்னியோ தீவில் உள்ள துறைமுக நகரான பாலிக்பபன்
நகரில் செமயாங் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் எண்ணெய்க்
கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர்; ஆகையால் பாலிக்பபன் நகரில்
அவசர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது
# இலங்கை: நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர், திரு. ரணில்
விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்
# ரஷ்யா: ரஷ்ய முன்னாள் உளவாளி (செர்ஜே ஸ்கிரிபால்) மற்றும் அவருடைய
மகள் மீது ரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தும், அமெரிக்காவும் தான்: ரஷ்ய
உளவுப் பிரிவு
# அமெரிக்கா: மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க
அதிபர், திரு. டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்
# ஐ. நா: ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில்
பாகிஸ்தானைச் சேர்ந்த 139 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன
*வணிகம்*
# இந்தியாவின் முக்கியமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டை,
அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது;
அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனமும் பிளிப்கார்ட்டை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை
ஏற்கனவே தொட்னகியுள்ளது குறிப்பிடத்தக்கது
*விளையாட்டு*
# 71 நாடுகள் பங்கேற்கும் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது; தொடக்க விழா அணிவகுப்பில்
இந்திய அணி சார்பில் பாட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து தேஸ்ய கொடியை ஏந்திச் செல்ல
வீரர்கள் அணிவகுத்தனர்
# 2018 காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி
பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது
- தங்கம்: மகளிருக்கான 48கி பளுதூக்குதல் – மீராபாய் சானு
- வெள்ளி: ஆடவ்ருக்கான 56கி பளுதூக்குதல் - குருராஜா
No comments:
Post a Comment