# காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம்
முழுவதும், எதிர்க்கட்சிகள் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்
நடத்தப்பட்டது
# நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான குழு நாடுகளுக்கிடையே
குழந்தைகளைப் பிரித்தல் மற்று அடைத்து வைத்தல் தொடர்பான சட்டப் பிரச்சனைகள் மீதான அறிக்கையை
அரசிடம் தாக்கல் செய்தது
# உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்
கோரி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை நிராகரித்து குடியரசுத் துணைத் தலைவர் (மாநிலங்களவை
தலைவர்) திரு. வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார் ; இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது
# தன் பாலினச் சேர்க்கையை (ஓரினச்சேர்க்கை) குற்றம்
என்பதை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்
நேட்டீஸ் அனுப்பியுள்ளது; இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி தன்பாலினச் சேர்க்கை
குற்றமாகும். பல நாடுகளில் தன்பாலினச் சேர்க்கைக்கு அந்த நாட்டு அரசுகளே ஒப்புதல் வழங்கியுள்ளன.
- தன்பாலினச் சேர்க்கை குற்றமற்ற செயல் என்று
2009-ம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
மேல்மூறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
377-வது சட்டம் இருக்கும் வரை தன்பாலிசச் சேர்க்கை என்பது குற்றம் தான் என தீர்ப்பளித்தது.
மேலும் உச்ச நீதிமன்றம், இந்த விஷியத்தில் நாடாளுமன்றம்தான் உரிய முடிவெடுக்க வேண்டும்
என்று தீர்ப்பளித்தது
*மாநிலங்கள்*
# டையூ: பகல் நேரத்தில் 100% புதுப்பிக்கவல்ல எரிசக்தியைப்
பயன்படுத்தும் முதல் இந்திய பொலிவுறு நகரமாகிறது (Smart
City) டையூ
# மேகாலாயா: மாநிலத்திலிருந்து ஆயுதப்படை சிறப்புச்
சட்டத்தை (ஏஎப்எஸ்பிஏ /
AFSPA) வாபஸ் பெறுவதாக மத்திய உள்தூறை அமைச்சகம் அறிவித்துள்ளது
*வெளியுறவு*
# இரு நாட்டு ஊறவை பலப்படுத்த, உணர்வுகளை வெளிப்படுத்த
இந்தியர்களும், சீனர்களும் மற்றவர் மொழியை கற்க வேண்டும்: மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர், திருமதி. சுஷ்மா ஸ்வராஜ்
*உலகம்*
# பெல்ஜியம்: கடந்த 2015 நவம்பர் 13, 14-ம் தேதிகளி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேரி
உயிரிழந்த வழக்கில் பிடிப்பட்ட ஒரே தீவிரவாதியான (மீதியிருந்த 7 தீவிரவாதிகள் சுட்டுக்
கொல்லப்பட்டனர்) சலா அப்டேசலாமுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது பெல்ஜியம்
நீதிமன்றம்
*வணிகம்*
# ஏப்ரல் 25-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான
சரக்கு போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் (E-way bill) மூறை கீழ்கண்ட மாநிலங்களில் அமல்படுத்தப்படும்
1)
புதுச்சேரி
2)
அருணாச்சல்ப் பிரதேசம்
3)
மத்தியப் பிரதேசம்
4)
மேகாலயா
5)
சிக்கிம்
# சர்வதேச எஸ்.எம்.ஈ. (சிறு, குறு மற்றும் நடுத்தரத்
தொழில்கள்) மாநாடு 2018 புது தில்லியில் நடைபெற்றது
# டாடா குழுமத்தின் அங்கமான சாஃப்ட்வேர் நிறுவனமான
டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டி.சி.எஸ்) நாட்டின் முதலாவது 100 பில்லியன் டாலர் நிறுவனம்
என்ற பெருமையை எட்டியுள்ளது (ஏப்ரல் 23, 2018)
# 2017-ம் ஆண்டில் இந்டியாவுக்கு வெளி நாடுகளில்
பணி செய்யும் இந்தியர்கள் அனுப்பி வைத்த மொத்தத் தொகை 6, 900 கோடி டாலர் என உலக வங்கி
தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதிக பணம் அனுப்பப்படும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியா
தக்கவைத்துள்ளது
*விளையாட்டு*
# மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன்
செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்
சுற்றில் தென் ஆப்பிரக்காவின் டிரிஸ்டனை வீழ்த்தி பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார்
# மகளிருக்கான 8-வது கோபா அமெரிக்க கால்பந்து தொடரை 7-வது முறையாக
வென்றது பிரேசில் அணி; இதன் மூலம் பிரேசில் மகளிர் கால்பந்து அணி 2019-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும்
உலகக் கோப்பை மற்றும் 2020-ம் ஆண்டு
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது
*இதர*
# ஏப்ரல் 24: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்
- ஏப்ரல் 24, 1992: புதிய பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கான 73-வது அரசிய சாசனத் திருத்தச் சட்டம்
நடைமுறைக்கு வந்த நாள்
# உலக பத்திரிக்கை சுதந்திர பரிசு எகிப்து நாட்டின்
புகைப்பட கலைஞரான அபு செயீதுக்கு வழங்கப்படும் என யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment