Followers

May 6, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [மே 01 – 05, 2018]


 *தமிழகம்*
# தமிழக உள்ளாட்சி மூறைமன்ற நடுவத்தின் அதிகாரியாக இருந்த சோ. அய்யரின் 3 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததால், அவருக்கு தமிழக அரசு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது. அளுநர், திரு. பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

# தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நான்கு கிராம பஞ்சாய்த்துக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தமிழக அரசிற்கு அனுப்பியுள்ளது

# குடியரசு தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த் 2 நாள் பயனமாக தமிழகம் வந்தார்
- வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்
- சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு நூற்றாணடு கடந்த வைரவிழா மற்றும் 160-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

# தமிழ் திரைப்பட நடிகர், திரு. அஜித் குமார் (“தல”) அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை தொழில்நுட்ப கல்லூரியின் “ஹெலிகாப்டர் சோதனை விமானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக” நியமிக்கப்பட்டுள்ளார்

# புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தூணைவேந்தர், திரு. மு. அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அந்த குழுவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய பாட புத்தகங்கள் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
- அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாட நூல்களை முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்
- தேசியக் கலைத்திட்டம் 2005-ல் வெளியிடப்பட்டது, மாநிலத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும் மேல் நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்டது

# தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்

# சென்னை பச்சையப்பன் கல்லூரி தனது 175-வது ஆண்டு விழாவை கொண்டாடியது

# வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி (சி.எம்.சி. / CMC) நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள் ஆற்றிய உரை:
·       இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது மக்களின் சுகாதாரம் மேசமான நிலையில் இருந்தது
·       இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 24 ஆண்டுகளாக இருந்தது
·       காசநோயால் நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழந்தார்
·       ஒரு நிமிடத்துக்கு ஒரு வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர்
·       அந்த மாதிரியான காலக்கட்டத்தில் ஜடா ஸ்கடர், 1918-ம் ஆண்டு வேலூரில் பெண்கள் மட்டும் படிக்கும் மருத்துவப் பள்ளியை தொடங்கினார்; 1947-ம் ஆண்டு முதல் ஆண்கள், பெண்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது
·       தொழில்துரை, பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா பல பாதைகளைக் கடந்து வந்துள்ளது. இதன் மூலம் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 68 ஆக உயர்ந்தது.
·       உயிர் பலி வாங்கிய சின்னம்மை, போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது
·       குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் “இந்திரதனுஷ்” திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது
·       ஆரம்ப சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
·       சுகாதார குறியீட்டில் தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது


*இந்தியா*
# இந்தியாவிலேயே தொடர்ந்து 24 ஆண்டுகளாக முதல்வர் பதவியை வகித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார், சிக்கிம் மாநில முதல்வர், திரு. பவன் குமார் சாம்லிங்; இதன் மூலம், மேற்கு வங்க முதல்வராக 23 ஆண்டுகாலம் பதவியில் இருந்த திரு. ஜோதி பாசுவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்

# இந்தியா – மற்றொரு சாதனையை எட்டிப் பிடித்து இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தின் லீசாங் கிராமம் மின் இணைப்பு பெற்றது (ஏப்ரல் 28, 2018) மூலம், இந்தியாவில் உள்ள 5, 97, 464 கிராமங்களையும் மின்சாரம் எட்டி இருக்கிறது
- இந்தியாவில் மொத்தமாக சுமார் 37 கோடி குடும்பங்கள் உள்ளன. எல்லா வீட்டுக்கும் மின்சார இணைப்பு கிடைத்து விட்டதாகச் கருத கூடாது. இந்திய மின்சாரத்துறையில், ஒரு கிராமத்தில் 10% வீடுகளுக்கு மின் வசதி இருந்தாலே, அந்த கிராமம் மின் இணைப்பு பெற்றதாகக் கணக்கில் கொள்ளப்படும் 

# 15வது பர்வசி பாரதிய திவாஸ் (வெளிநாட்டு வாழ் இந்தியர்) உத்திரப் பிரதேச மா நிலத்தில் உள்ள வாரணாசியில் ஜனவரி 21 – 23, 2019 ஆகிய தேதிகளில் Role of Indian Diaspora in building a New Indiaஎன்ற கருப்பொருளில் நடைபெறும்
- இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உத்திரப் பிரதேச மா நில அரசுடுன் இணைந்து நடத்துகிறது
- மொரிஷியஸ் நாட்டின் பிரதமர், திரு. பரவீந்த் ஜூகநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்

# இந்திய ராணுவத்தின் தென் மேற்கு பிரிவில் உள்ள சுமார் 20000 வீரர்கள் விஜய் ப்ரஹார்” (Vijay Prahar) என்ற ராணுவ பயிற்சியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்கர் என்ற இடத்தில் நடத்தினர்

# நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (POCSO Act: Protection of Children from Sexual Offences)

# சுற்றுச்சூழல் மோசமாக மாசடைந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு (WHO); 20 நகரங்கள் கொண்ட பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன

# மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் வரும் அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் செய்து வருகிறது. இது தொடர்பாக மாநில முதல்வர்கள் கூட்டம் குடியரசுத் தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த் தலைமையிலும், பிரதமர், திரு. நரேந்திர மோடி முன்னிலையிலும் நடைபெற்றது
- 150வது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அக்டோபர் 02, 2018-19 முதல் அக்டோபர் 02, 2020 வரை நடைபெறுகிறது; இதற்காக ரூ. 150 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- இந்த விழாவின் திட்டங்கள் அனைத்தும் என்று கருப்பொருளில் இருக்கும் என்று பிரதமர், திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
- தங்களுடைய அமைச்சகம் காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை 193 நாடுகளில் நடத்தும்: மத்திய வெளியுறவு தூறை அமைச்சர், திருமதி சுஷ்மா ஸ்வராஜ்
- காந்தியை கெளரவிக்கும் வகையில் “அகிம்சை” என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்க வேண்டும்: ஒடிசா முதல்வர், திரு. நவீன் பட்நாயக்
- 150வது மகாத்மா காந்தியின் பிறந்த ஆண்டை அமைதி மற்றும் சம்ரசம் ஆண்டாக கடைபிடிக்க வேண்டும்: ஜம்மு & காஷ்மீர் முதல்வர், திருமதி. மெகபூபா முப்தி
- 150வது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடைமுறை செய்வதற்காக அரசு 125 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது (இந்தியாவிலிருந்து 116 பேரும், வெளிநாட்டிலிருந்து 9 பேரும் இதில் உள்ளனர்) 

# சிம் கார்டு வழங்க ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இதர ஆவணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

# பிரதமரின் மருத்துவ பாதுகாப்புத் திட்டம் 2020 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு ரூ. 14. 832 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

# உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பயங்கர புழுதிப் புயலுக்கு 114 பேர் பலியாகியுள்ளனர். 200-ல்க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்

# தில்லியில் நடைபெற்ற 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விழாவை புறகணித்தனர். ஆண்டுதோறும் தேசிய திரைப்பட் விருதுகளை குடியர்சு தலைவர் விருது வென்ற அனைவருக்கும் தருவார். ஆனால், இந்த் ஆண்டு 11 பேருக்கு மட்டுமே அவர் கொடுத்ததால் சர்ச்சை ஆனது. மீதி விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், திருமதி ஸ்மிருதி இராணி கொடுத்தார்

# சிக்கிமின் பாக்யோங் விமான நிலையம் இந்தியாவின் 100வது பயணிகள் விமான நிலையமாக உருவெடுத்துள்ளது

# இந்தியாவில் பெண்களுக்கென்று சிறப்பு புறநகர் ரயில் சேவை தொடங்கி 26 ஆண்டுகள் ஆகிறது
- நாட்டின் முதல் பெண்கள் புறநகர் ரயில் சேவை மும்பையில் உள்ள சர்ச்கேட்டுக்கும் போரிவாலிக்கும் இடையே மே 05, 1992-ல் தொடங்கப்பட்டது
 *மாநிலங்கள்*

# ஜம்மு & காஷ்மீர்: மாநிலத்தின் புதிய துணை முதல்வராக, திரு. கவீந்தர் குப்தா பதவியேற்றார்

# மத்தியப் பிரதேசம்: காவலர் பணி உடற்தகுதி தேர்வில் பங்கெற்ற இளைஞர்களின் உடலில் அவர்களின் சாதி பெயரை எழுதியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

# மகாராஷ்ட்ரா: நில பத்திரங்களை டிஜிட்டல் கையெழுத்துடன் வழங்கியுள்ள முதல் மாநிலமானது மகாராஷ்ட்ரா

# ராஜஸ்தான்: பிப்ரவரி 14-ம் தேதியை தாய்-தந்தை பூஜை தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது

# ஆந்திரப் பிரதேசம்: திருப்பத்திக்கு பைக்கில் செல்ல ஹெல்மட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
*வெளியுறவு*
# 9வது இந்திய – ஜப்பான் ஆற்றல் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது 

# மைசூரில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவுக்கு 2 பச்சை நிற அனகோண்டா பாம்புகளை இலங்கை அன்பளிப்பாக வழங்கி உள்ளது

# துணை குடியரசு தலைவர், திரு. வெங்கைய்யா நாயுடு தனது முதல் அரசு மூறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். தென் அமெரிக்கவில் உள்ள கெளதமாலா, பனமா மற்றும் பெரு நாடுகளுக்கு செல்கிறார்
இந்தியாவும், பெருவும் 2018-ல் தனது 55-வது ஆண்டு ராஜங்க உறவுகளை கொண்டாடுகிறது
*உலகம்*
# ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகக் கூறினாலும், அதன் நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டுத் தலைவர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

# பாலியல் குற்றச்சாட்டு (#MeToo campaign) எழுந்ததை அடுத்து இந்தஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தரப்படமாட்டாது.
 *வணிகம்*
 # சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலமான வருமான ஏப்ரல் மாதத்தில் ரூ. 1. 03, 458 கோடியாக இருந்தது: மத்திய நிதி அமைச்சகம்

# விமான பயணிகளுக்கு செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவையை அளிப்பது  தொடர்பான பரிந்துரைக்கு தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. 

# இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏஐ / IRDAI) தலைவராக திரு. சுபாஷ் சந்திர குந்த்யா நியமிக்கப்பட்டுள்ளார்

# தில்லியில் நடைபெற்ற 27-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், வரி தாக்கல் முறையை எளிதாக்குவதற்கு அமைச்சரவை குழு அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது




*விளையாட்டு*
# பார்சிலோனா ஓபன் 2018 பட்டத்தை ராபல் நாடால் 11வது முறையாக வென்றார்
# இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக, திரு. ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்; மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக, திரு. சோஜெர்ட் மரிஜென் நியமிக்கப்பட்டுள்ளார்
# இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் அசர்பெய்ஜான் கிராண்ட் பிரிக்ஸ் 2018 பட்டத்தை வென்றார்
*இதர*
# இரண்டாவது உலக இந்து மத மாநாடு அமெரிக்காவின் சிக்காகோவில் Think Collectively, Achieve Valiantlyஎன்ற கருப்பொருளில் செப்டம்பர் 07 – 09, 2018 தேதிகளில் நடைபெறும்; முதலாவது உலக இந்து மத மாநாடு புதிதில்லியில் 2014–ல் நடைபெற்றது

# இந்திய – அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த தீபா அம்பேதகார் நியூயார்க் நகரில் உள்ள சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

# சர்வதேச புத்த மத மாநாடு 2018 நேபாளத்தில் உள்ள லும்பினியில் Lumbini Nepal: The birthplace of Lord Buddha and the fountain of Buddhism and World Peaceஎன்ற கருப்பொருளில் நடைபெற்றது

 



# அருண் ஷோரி எழுதிய புத்தகம் Anita Gets Bailவெளியிடப்பட்டது

# பொருளாதார நிபுனர், திரு. அசோக் மித்ரா காலமானார்
- இவர் மேற்கு வங்க மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்துள்ளார்

# ராணுவத்திற்காக செலவு செய்யும் நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகளவில் 5-வது இடத்தை பிடித்துள்ளது
உலகில் அதிக ராணுவ செலவுகளௌ செய்யும் நாடுகள்: SIPRI
#
நாடு
செலவு
1
அமெரிக்கா
$610 பில்லியன்
2
சீனா
$228 பில்லியன்
3
சவுதி அரேபியா
$69.4 பில்லியன்
4
ரஷ்யா
$66.3 பில்லியன்
5
இந்தியா
$63.9 பில்லியன்
6
பிரான்சு
$57.8 பில்லியன்
7
இங்கிலாந்து
$47.2 பில்லியன்
8
ஜப்பான்
$ 45.4 பில்லியன்
9
ஜெர்மனி
$44.3 பில்லியன்
10
தென் கொரியா
$39.2 பில்லியன்

# மே 01: உலக ஆஸ்துமா தினம்; கருப்போருள்: Never too early, never too late. It’s always the right time to address airways disease

# மே 01: உலக தொழிலாளர் தினம்;

# மே 03: உலக பத்திரகை சுதந்திர தினம்

# மே 04: சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்




No comments:

Post a Comment