*தமிழகம்*
#
17வது உலக தமிழ் இணைய மாநாடு கோயம்புத்தூரில், “Intellectual Tamil Search Engines” என்ற கருப்பொருளில் ஜூலை
06 – 08, 2018 தேதிகளில் நடைபெறும்
#
இரு
முறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழறிஞர் ம.லெ. தங்கப்பா காலமானார்
*இந்தியா*
#
10 மாநிலங்களில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிம்
மத்தியில் ஆளும் பா.ஜ.க. தோல்வி
# மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதித்துப்
பார்க்கப்பட்டது
# நாடுமுழுவதிலும் உள்ள மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக
பணியில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) மீண்டும் நடைபெற உள்ளது.
*மாநிலங்கள்*
#
ஆந்திர
பிரதேசம்: மாநிலம் பிரிந்து 4 வருடங்கள் கழித்து, மாநிலத்துக்கென்று
மாநில சின்னங்களை அறிவித்தது அரசு
*வெளியுறவு*
#
மலேசிய
பிரதமர், திரு. மகாதிர் முகமதுவை கோலால்ம்பூரில் சந்தித்து பேசினார், இந்திய பிரதமர்,
திரு. நரேந்திர மோடி
# சிங்கப்பூர் பிரதமர், திரு,. லீ சியங் லூங்கை சந்தித்து பேசினார்,
இந்திய பிரதமர், திரு. நரேந்திர மோடி; செல்போனில் பணபரிமாற்றம் செய்வதற்கான செயலிகளான
பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ. (ரூபே) மற்றும் எஸ்.பி.ஐ. ஆகிய இந்திய செயலிகளை சிங்கப்பூரில்
பிரதமர் திரு. மோடி அறிமுகப்படுத்தினார்
*உலகம்*
#
சிங்கப்பூர்
முதல் நியூயார்க் (நெவர்க் விமான நிலையம்) வரியயில் நீண்டதூர விமான சேவையினை சிங்கப்பூர்
ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் இந்த சேவை செயல்படத் தொடங்கும். 16, 700 கிலோமீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 45 நிமிடத்தில் இந்த விமானம் கடக்கும். இந்த விமான சேவை நடைமுறைக்கு
வரும் போது, இதுதான் நீண்ட தூரம் நிற்காமல் பயணிக்கும் விமானமாக இருக்கும் (தற்போது,
தோஹா முதல் ஆக்லாந்து வரையில் இயக்கப்பட்டு வரும் விமான சேவையே நீண்ட தூரம் நிற்காமல்
பயணிக்கும் விமானமாக இருக்கிறது)
*இதர*
# ஜூன் 01: உலக பால் தினம்
# ஜூன் 01: சர்வதேச பெற்றோர்கள் தினம்
No comments:
Post a Comment