Followers

Jun 3, 2018

[CA] Daily News (Tamil) [03-06-2018]


*தமிழகம்*
# காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் தமிழக உறுப்பினர்கள் அறிவிப்பு:
·        காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பகுதிநேர உறுப்பினர்: திரு. எஸ். கே. பிரபாகர் (பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர்)
·        தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினர்: திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர், திரு. ஆர். செந்தில் குமார்

# சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக்த்தின் புதிய துணைவேந்தராக பேராசிரய்ர், வி. முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்
*இந்தியா*
# 7 வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டை அறிய மத்திய குழுக்களை அமைத்தார் பிரதமர், திரு. நரேந்திர மோடி. அந்த திட்டங்களானது: உஜ்வாலா யோஜனா, சவுபாக்யா யோஜனா, உஜாலா யோஜனா, ஜன் தன் யோஜனா, ஜீவன் ஜோதி பீம யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் மிஷன் இந்திரதனுஷ்
7 வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டை அறிய மத்திய குழுக்கள் அமைப்பு: பிரதமர்
திட்டங்கள்
எதற்காக
உஜ்வாலா யோஜனா
இலவச சமியயல் எரிவாயு இணைப்பு
சவுபாக்யா யோஜனா
மின்சார இணைப்பு
உஜாலா யோஜனா
மின்சார பல்புகள் வினியோகம்
ஜன் தன் யோஜனா
வங்கிக் கணக்கு தொடங்குதல்
ஜீவன் ஜோதி பீம யோஜனா
விபத்துக் காப்பீடு
சுரக்ஷா பீமா யோஜனா
ஆயுள் காப்பீடு
மிஷன் இந்திரதனுஷ்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வினியோகம்

# மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை: தலைமை தேர்தல் ஆணையர், திரு. ஓ.பி. ராவத்
*வெளியுறவு*
# பிரிக்ஸ் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா ஸ்வராஸ் 5 நாள் பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார்
·        ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்
·        ஐபிஎஸ்ஏ (இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்
·        மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது நிறவெறி காரணமாக, ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
*உலகம்*
# ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக ஸோஷலிச கட்சித் தலைவர், திரு. பெட்ரோ சான்செஸ் பதவியேற்றார்; முன்னாள் பிரதமர், திரு. மரியானோ (பழமைவாத மக்கள் கட்சி)  ஊழல் புகார் எழவே அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வெற்றி பெற்றது.

# அமெரிக்கா: கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், (சுபம் கோயல்) சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்
*வணிகம்*
# பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி, இரும்புத் தாதுவிலிருந்து தூய்மையான இரும்பினை பிரித்தெடுப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டின் ஈ.சி.ட். எனப்படும் தூய்மை மிகு சுற்றுச் சூழல் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனம் என்ற மத்திய பொதுத் துறை நிறுவனம் ஆகியவற்றிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
*விளையாட்டு*
# 2026 -ல் இளையோர் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் மும்பையில் நடத்தவும், 2032 ஒலிம்பிக்ஸ் போட்டியை புது தில்லியில் நடத்தவும் இந்திய ஒலிம்பிக் கழகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது





No comments:

Post a Comment