Followers

Showing posts with label நடப்பு செய்திகள். Show all posts
Showing posts with label நடப்பு செய்திகள். Show all posts

Mar 31, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [31-03-2018]


*தமிழகம்*
# காவிரி விவகாரத்தில் மேலாணமை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று தாக்கல் செய்கின்றனர் தமிழக அதிகாரிகள்
- உச்ச நீதிமன்றம் அறிவித்தவாறு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 3-ம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்
- ஏப்ரல் 11 – ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: விவசாய சங்கங்கள்
- ஏப்ரல் 1 – ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்; தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்: தி.மு.க.
- தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
*இந்தியா*
# சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான வினாத்தாளும், 10-ம் வகுப்புக்கான கணிதப் பாடத்துக்கான வினாத்தாளும் தில்லி உட்பட வட மாநிலங்களில் சமூக வளைத்தளங்க்ளில் வெளியானது; இதனால் மறுத்தேர்வுக்கு உத்தரவிட்டது அரசு; இதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான கணிதப் பாடத்துக்கான மறு தேர்வு தேவைப்பட்டால் ஜூலை மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
# இந்திய ரயில்வே தூறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பம்
# நாடு முழுவதும் சிறைச்சாலைகள் 600 சதவீதத்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டு நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றம்; இதுகுறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதிலை அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது
# மகாராஷ்ட்ரா: முதல்வர் அலுவலகத்தில் தினமும் 18, 500 கோப்பை தேநீர் விநியோகம் நடக்கிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது
# மகாராஷ்ட்ரா: புனே நகரில் போக்குவரத்து விதி மீறலை தடுக்கும் நடவடிக்கையாக எதிர்திசையில் வாகனம் ஓட்டினால் டயரை பஞ்சாராக்கும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது
# அசாம்: காசிரங்கா தேசியப் பூங்காவில் புதிதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2, 413 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த 2015-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை விட 12 கூடுதலாகும்
# அசாம்: “181-சகி” என்ற இலவச தொலைப்பேசி எண்ணை பெண்களின் பாதுக்கப்புக்காக அறிமுகப்படுத்தியுள்ளது அரசு
# மத்திய பிரதேசம்: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62ஆக உயர்த்தியது அரசு
# உத்திர பிரதேசம்: இந்தியாவின் மிக நீளமான சாலை வழி பாலம் காசியாபாத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது (ஹிண்டான் பாலம்); காசியாபாத்திற்கும் தில்லிக்குமான போக்குவரத்து நெரிசலை இது குறைக்கும்
# மேற்கு வங்காளம்: பத்திரிக்கையாளர்களுக்கு மாத பென்சன் தொகையாக ரூ. 2, 500 வழங்க அரசாங்கம் முடிவு
*வெளியுறவு*
# அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாண சட்டமன்றம் ஏப்ரல் மாதத்தை “சீக்கியர்களின் விழிப்புணர்வு மற்றும் அவர்களை கெளரவப்படுத்தும் மாதமாக” (Sikh Awareness and Appreciation Month) கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது; சமீபத்தில் சீக்கயர்களுக்கு எதிரான வன்முறை இந்த மாகாணத்தில் நிறைய நடந்துள்ளதால், இதனை செய்துள்ளது அந்த மாகாண அரசு
*உலகம்*
# சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ்: அமெரிக்க அதிபர், திரு. டொனால்ட் ட்ரம்ப்
# மியான்மர்: அரசமைப்பு சாசனம் திருத்தப்படும் – புதிய அதிபர், திரு. வின் மையிண்ட்
# ரஷ்யா: உளவுத் துறை அதிகாரி மீதான ரசாயனத் தாக்குதல் விவகாரத்தில் பதிலடியாக, அமெரிக்க தூரரக அதிகாரிள் 60 பேர் உட்பட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 150 அதிகாரிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது
# அமெரிக்கா: செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆழமான பகுதிகளை பற்றி ஆராய்வதற்காக “இன்சைட்” (InSight: Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport) என்ற செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது நாசா அமைப்பு
*பொருளாதாரம்*
# அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயு (LNG) நிரப்பப்பட்ட கப்பல் இந்டியாவுக்கு வந்தது. அமெரிக்காவிலிருந்து LNG இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவது இது முதல் முறையாகும்; முதலாவது கப்பல் “எம். வி. மெரிடியன்” 25 நாள் பயணத்துக்குப் பிறகு மகாராஷ்ட்ரா மாநிலம் தபோல் மின்னுற்பத்தி நிலையத்துக்கு வந்தது
*விளையாட்டு*
# 2018க்கான சந்தோஷ் கோப்பை இறுதி போட்டி மேற்கு வங்காளம் மற்றும் கேரளா அணிகளுக்கு இடையே நடைபெறும்
*இதர*
# இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ள சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் பட்டியலில், பிரதமர், திரு. நரேந்திர மோடி முதலிடத்துள்ளார்
(1) திரு. நரேந்த்ர மோடி - பிரதமர்
(2) திரு. அமித் ஷா – பா.ஜ.க. தலைவர்
(3) திரு. தீபக் மிஸ்ரா – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
(4) திரு. மோகன் பகவத் – ஆர்.எஸ்.எஸ். தலைவர்
(5) திருமதி சோனியா காந்தி – தலைவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி


Mar 30, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [30-03-2018]


தமிழகம்
# போராட்டம் தீவரமடைந்துள்ள நிலையில் பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை நிறுத்தம்

# உச்ச நீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர உள்ளது
- காவிரி பிரச்சினையில் ஆதரவளிப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் அமளியை நிறுத்துவோம் என அ.இ.அ.தி.மு.க. நிபந்தனை விதித்ததாகவும் அதை காங்கிரஸ் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது

# திருச்சியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வில்லெட் ஓவியா, வெளி மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைட் மற்றும் பிற வாயுக்களின் அளவைக் கணக்கிடுவதற்கான “அனிதா சாட்” என்ற செயற்கைக் கோளத் தயாரித்தமைக்காக தமிழக முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி நினைவுப் பரிசை வழங்கினார்

# சென்னை – மதுரை இடையே ஒரு வழித்தடத்திலும், மதுரை – சென்னை இடையே மற்றொரு வழித்தடத்திலும் என இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை – மதுரை இடையே பயண நேரம் மேலும் குறையும்
இந்தியா
# ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட்
- 49.1 மீட்டர் நீளம், 415.6 டன் எடையுள்ள ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் உயர்சக்தி கொண்ட எஸ்-பேண்ட் (S - Band) அலைவரிசை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகளுக்கு ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் மிகவும் உதவிகரமாக இருக்கும்

# ஊழல் புரிந்ததாக அரசு அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தாலோ அல்லது இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ, அந்த அதிகாரிக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதியை ஊழல் கண்காணிப்பு அமைப்பு நிறுத்தி வைக்க வேண்டும்: மத்திய பணியாளர் நலத் துறை

# சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்: குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், திரு. பிரகாஷ் ஜவடேகர் உறுதி

# உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரபேல் போர் விமானத்தின் விலையை வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
- பிரான்சில் தயாரிக்கப்பட்ட அதி நவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக அந்நாட்டுன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது
உலகம்
# வடகொரியா – தென்கொரியா இடையிலான உச்சி மாநாடு ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறும்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் முதல்முறையாக மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர்
- இதற்கு முன் 2000 மற்றும் 2007-ல் மா நாடுகள் நடைபெற்றுள்ளன

# வெனிசுலா சிறையில் விசாரணைக் கைதிகள் மோதிக் கொண்டதில் 68 பேர் பலியாயினர்

# தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மலாலா யூசப்ஸாய், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய்நாடான பாகிஸ்தானுக்கு வந்தார்; பாதுகாப்பு காரணங்களால் அவருடைய பயணத்திட்டங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன

# அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர், திரு. நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்; மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி திரு. சத்ய நாதெள்ள இடம் பெற்றுள்ளார்
- உலகம் முழுவதும் இருந்து டைம் இணையத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகள் மற்றும் டைம் இதழின் ஆசிரியர் குழு பரிசீலனை அடிப்படையில் 100 பேரில் ஒருவர் இட்ந ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட உள்ளார்

# மலேசியாவில் எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, பொய் செய்திக்கான சிறை தண்டனையை குறைத்து மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது; பொய் செய்தியை வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 84 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது; இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பொய் செய்திக்கான 10 ஆண்டுகள் சிறையை 6 ஆண்டுகளாக குறைத்து மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
விளையாட்டு
# பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு அமராவதியில் ஆந்திர முதல்வர் துணை ஆட்சியருக்கான பணி நியமன உத்தரவை வழங்கி சிறப்பித்தார்