DARPG
கோவிட்
– 19 நோயின் கண்காணிப்புக்கான சேவையை மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு
மற்றும் ஓய்வுதியம் அமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர பிரசாத் வெளியிட்டார். இந்த கண்காணிப்பினை
அந்த அமைச்சகத்தின் DARPG (Department of Administrative Reforms and Public
Grievances) உருவாக்கி
செயல்படுத்தி வருகிறது.
இந்தியா – சீனா உறவுகளின் 70து
வருட கொண்டாட்டங்கள் ஒத்திவைப்பு
கோவிட் – 19 நோயினால் இந்தியாவும்,
சீனாவும் தங்களது 70வது இராஜந்திர உறவுகளின் கொண்டாட்டத்தை ஒத்திவத்துள்ளன. எனினும்,
இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டன. சீனாவுடன் கம்யூனிச
நாடு அல்லாமல் இராஜந்திர உறவு கொண்ட முதல் ஆசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் – 19 பற்றி ஐக்கிய சபை
பேச்சு
ஐக்கிய
நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போது தலைமை வகிக்கும் டொமினிகன் குடியரசு நாடு,
அடுத்த வாரம் கோவிட் – 19 நோயை பற்றி பேச உள்ளது. உலக நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான
ஏற்பாடுகளை பற்றி இந்த பேச்சுவார்த்தை பேசவுள்ளது. பொது சுகாதாரம் பாதுகாப்பு சபையின்
கீழ் வருவதில்லை, எனினும் இந்த சபை இதைப் பற்றி பேசவுள்ளது. முன்பு எபோலா வைரஸ் பாதித்த
போதும் இந்த சபை அந்த நோயின் தாக்கத்தைப் பற்றி பேசியது.
ஆரோக்ய சேது
கோவிட்
– 19 நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தில், இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக,
அரசு – தனியார் கூட்டு முயற்சியில் “ஆரோக்ய சேது” என்ற அலைபேசி செயலியை இந்திய அரசு
வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, பதினொரு மொழிகளில் கிடைக்கும்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியாவில் கோவிட் -19
மத்திய
சுகாதார அமைச்சகத்தின் படி, கோவிட் – 19 நோயினால பாதிக்கப்பட்ட இந்தியர்களின எண்ணிக்கை
1860 மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 53.
ஆனால் பல்வேறு ஊடகங்கள், 2500 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
76 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே,
உலக வங்கி இந்நோயை சமாளிப்பதற்காக இந்தியாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியுள்ளது.
இந்திய
பிரதமர், திரு. நரேந்திர மோடி, இந்நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு முடிந்த
பினபு எடுக்க வேண்டிய வழிகள் பற்றி பல்வேறு மாநில முதல்வர்களுடன் கானொளி காட்சி மூலமாக
பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவிட் – 19
|
Followers
Apr 3, 2020
[CA] News - April 03, 2020 [Tamil]
Labels:
April 2020,
CA,
Current Affairs,
Daily News,
Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment